சுடச்சுட

  


  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
  கூட்டத்துக்கு கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே.ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி.நசுருதீன், அதிரை பேரூர் நிர்வாகிகள் ஏ. முனாப், ஏ. சேக் அப்துல்லா, மு.காதர் முகைதீன், அபூபக்கர், ஏ. சாகுல்ஹமீது, எம்.ஆர். ஜமால் முகமது, இக்பால் உள்ளிட்டோர்கூட்டத்தில் பங்கேற்றனர்.
   மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில்,  ஏணி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிக்கு தீவிரமாக பாடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது. மேலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனையும் நடத்தினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai