சுடச்சுட

  

  பேராவூரணியிலிருந்து கோவை, திருப்பதிக்கு  பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 17th March 2019 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பேராவூரணியிலிருந்து கோவை, திருப்பதி, திருத்தணி போன்ற தொலைவிலான பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைகோடியில் உள்ளது பேராவூரணி வட்டம். 
  இப்பகுதியிலிருந்து தொலைவிலான பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
  பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து கோவைக்கு தினமும் வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சென்று வருகின்றனர். ஆனால் நேரடி பேருந்து கோவைக்கு இல்லை.
  இதனால், தஞ்சாவூர் ,திருச்சி சென்று அங்கிருந்து தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்தும் செல்லும் நிலை உள்ளது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேராவூரணி  போக்குவரத்து பணிமனையிலிருந்து புதுக்கோட்டை, திருச்சி வழியாக திருப்பூர்,கோயம்புத்தூரூக்கு அரசு  பேருந்து இயக்க வேண்டும்.
  இதுபோல பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கும், கிழக்கு கடற்கரைச் சாலையில் கட்டுமாவடி,மீமிசல்,ராமநாதபுரத்துக்கும்,
  தூத்துக்குடி வழியாக  திருச்செந்தூருக்கும்,புதுக்கோட்டை, மணப்பாறை, திண்டுக்கல் வழியாக  பழனிக்கும், வேலூர் வழியாக திருத்தணிக்கும்,  திருப்பதிக்கு நேரடியாக பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  இதுகுறித்து சமூக ஆர்வலர் ஏ.ஷேக்இப்ராஹிம்ஷா கூறியது: 
  மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேராவூரணியிலிருந்து  5 புதிய பேருந்துகள் தொலைவிலான வழித்தடத்தில் இயக்கப்படும் என  பேரவையில் அறிவித்தார்.
  இதுநாள் வரை அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை. போதிய பேருந்து வசதியில்லாததால் பேராவூரணி நகரம் பக்கத்தில் உள்ள பட்டுக்கோட்டை ,அறந்தாங்கி வட்டங்கள் வளர்ச்சி அடைந்த அளவிற்கு வளர்ச்சியடையவில்லை என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai