வாகன சோதனையில் பிடிபட்ட ரூ.1.80 லட்சம் ஒப்படைப்பு

கும்பகோணத் தை அடுத்த திருவலஞ்சுழியில் வாகனச் சோதனையில் பிடிபட்ட  ரூ. 1.80 லட்சத்துக்கு

கும்பகோணத் தை அடுத்த திருவலஞ்சுழியில் வாகனச் சோதனையில் பிடிபட்ட  ரூ. 1.80 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. 
திருவலஞ்சுழி கடைத்தெருவில் நிலையான கண்காணிப்பு குழு தேர்தல் அதிகாரி மதுசூதனன் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது,  கும்பகோணத்திலிருந்து வந்த சொகுசு காரை சோதனையிட்டனர். அதில் ரூ.1,80,000 பணம் இருந்தது. பின்னர் காரில் வந்தவரை விசாரணை செய்தபோது, திருச்சி, பால்பண்ணையை சேர்ந்த பழ வியாபாரி மஸ்தான் மதன் சபீர்(32) என்பது தெரியவந்தது. உடனே அவர் கும்பகோணம் வட்டாட்சியர்  நெடுஞ்செழியன் வசம் ஒப்படைக்கப்பட்டார்.  
கும்பகோணம் பகுதியில் பழங்களை விற்பனை செய்துவிட்டு, அதற்குரிய பணத்துடன் செல்கிறேன் என்று சபீர் தெரிவித்து,  உரிய ஆவணங்களை வழங்கினார். ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், சரியாக இருந்ததால், சபீரிடம் பணத்தை திரும்ப கொடுத்து அனுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com