நேர்மையாக வாக்களிக்க உறுதிமொழியேற்பு

 தஞ்சாவூர் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நேர்மையாக மற்றும் நூறு சதவிகிதம் வாக்களிப்பது குறித்த உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

 தஞ்சாவூர் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நேர்மையாக மற்றும் நூறு சதவிகிதம் வாக்களிப்பது குறித்த உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆ. அண்ணாதுரை தலைமையில் உறுதிமொழியேற்பு விழிப்புணர்வு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதைத் தொடர்ந்து ஆட்சியர் கூறும் போது,  கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்த வேண்டும். எந்த சின்னத்தில்யாருக்கும் வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவிக்கக்கூடாது. மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர், உறவினர்களிடம் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.
நிகழ்வில்,  மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், வருவாய்க் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன்,  கூட்டுறவு இணை இயக்குநர் ஏகாம்பரம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com