Enable Javscript for better performance
தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பார்வையாளர்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையைத் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் மெ. ஜெகதீஸ்வர் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
    இக்கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் கண்காணிப்புப் பறக்கும் படையினரின் வாகனங்கள் ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, தேர்தல் பொது பார்வையாளர் எம். ஜெகதீஸ்வர் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    மேலும், ஆட்சியரகத்தில் இயங்கி வரும் வாக்காளர் சேவைக்கான மாவட்ட தொடர்பு மையத்தையும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு அறையில் தொலைக்காட்சி விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவதையும், வாக்காளர் சேவை மையத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கத்தையும் இருவரும் பார்வையிட்டனர்.
    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai