Enable Javscript for better performance
பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு: நாளை சோதனை ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு: நாளை சோதனை ஓட்டம்

    By DIN  |   Published on : 28th March 2019 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து,  இத்தடத்தில் ரயில்களை இயக்குவதற்கான முன்னோட்டமாக,  பெங்களூரு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் முதல் நாளாக செவ்வாய்க்கிழமை காலை திருவாரூரில் இருந்து,  திருத்துறைப்பூண்டி வரை டிராலியில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    2ஆவது நாளாக புதன்கிழமை காலை பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து முத்துப்பேட்டை வரை  டிராலியில் சென்ற அதிகாரிகள், செல்லும் வழியில் உள்ள அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ஆகிய ரயில் நிலையப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், பாலங்கள், சிக்னல், கிராசிங், லெவல் கிராசிங் கேட்டுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    நிறைவாக, 3ஆவது நாளாக வியாழக்கிழமை காலை முத்துப்பேட்டையிலிருந்து தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். 
    இதைத் தொடர்ந்து,  மார்ச் 29 (வெள்ளிக்கிழமை) காலை பட்டுக்கோட்டையில் தொடங்கி திருவாரூர் வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.  ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இத்தடத்தில் ரயில் சேவை தொடங்க வாய்ப்புகள் உள்ளதாக தெற்கு ரயில்வே அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.  
    முன்னதாக, பட்டுக்கோட்டை ரயில் நிலையம் வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன்,  தலைமை நிர்வாக அதிகாரி எல். சுதாகர்ராவ்,  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டி,  தலைமை பொறியாளர் இளம்பூர்ணம் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்களை பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி சேகர்,  நகர வர்த்தக சங்கத் தலைவர் எஸ். ராமானுஜம்,  பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் என். ஜெயராமன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்று,  இவ்வழித்தடத்தில் சென்னைக்கு தினசரி ஒரு  இரவு நேர ரயில்,  ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு தினசரி பகல் நேர விரைவு ரயில், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai