Enable Javscript for better performance
பொதுப் பார்வையாளர் வருகை- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப் பார்வையாளராக நரேந்தர சங்கர் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
    இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப் பார்வையாளராக நரேந்தர சங்கர் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்லிடப்பேசி எண் 9385285801. இவர் தஞ்சாவூர் புதிய சுற்றுலா மாளிகையில் பிளாக் எண் 1-இல் அறை எண் 6-இல் தங்கியுள்ளார். இவரை நாள்தோறும் காலை 10.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை பொதுமக்கள் நேரில் சந்தித்து தேர்தல் தொடர்பான தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம். ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 - 425 - 8036-இல் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai