Enable Javscript for better performance
வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

    By DIN  |   Published on : 28th March 2019 07:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
    தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர் ஆகிய வட்டங்களுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தன. இந்த இயந்திரங்களைக் கடந்த வாரம் பொறியாளர்கள் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து, இரு நாட்களுக்கு முன்பு இந்த இயந்திரங்கள் எந்தெந்த வாக்கு சாவடிக்கு அனுப்புவது என்பது குறித்து முதல் கட்டச் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு, எண் வழங்கப்பட்டது.
    இந்நிலையில், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் புதன்கிழமை வந்தனர். இதையடுத்து, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் முதல் சுற்றாக சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சோதனையிட்டனர்.
    இப்பணியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பார்வையிட்டார். இவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்துக்குப் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai