Enable Javscript for better performance
வேட்பு மனுக்கள் பரிசீலனை: மக்களவைத் தொகுதியில் 12 பேரின் மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    வேட்பு மனுக்கள் பரிசீலனை: மக்களவைத் தொகுதியில் 12 பேரின் மனுக்கள் ஏற்பு

    By DIN  |   Published on : 28th March 2019 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது புதன்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் 12 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
    தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக மொத்தம் 26 பேர் 38 மனுக்களை தாக்கல் செய்தனர். ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆ. அண்ணாதுரை தலைமையிலும், வேட்பாளர்கள், அவர்களுடைய பிரதிநிதிகள் முன்னிலையிலும் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது.
    இதில், வேட்பாளர்களான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக), என்.ஆர். நடராஜன் (தமாகா), சம்பத் ராமதாஸ் (மக்கள் நீதி மய்யம்), என். கிருஷ்ணகுமார் (நாம் தமிழர் கட்சி), இரா. ஸ்டாலின் (பகுஜன் சமாஜ் கட்சி), சுயேச்சை வேட்பாளர்களான பொ. முருகேசன் (அமமுக), டி. விஜயகுமார்,  கி.நா. பனசை அரங்கன்,  ஆர். செல்வராஜ்,  கே. சமந்தா,  கே. அப்துல் புகாரி,  எஸ். முத்துவேல் ஆகிய 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
    மேலும்,  திமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் கூடுதல் வேட்பு மனுக்கள்,  மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் என மொத்தம் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தவிர, 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
    வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை உள்ளது. அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai