தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தேர்தலில் 13 பேர் போட்டி

தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் 13 பேர் போட்டியிடுவது தெரிய வந்தது.

தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் 13 பேர் போட்டியிடுவது தெரிய வந்தது.
தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மார்ச் 26-ம் தேதி வரை மொத்தம் 21 பேர் 26 மனுக்களை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், ஒரு வேட்பாளர் மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை சின்னங்களுடன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 13 பேர் போட்டியிடுவது தெரிய வந்தது.
வேட்பாளர் - கட்சி - சின்னம்:
1. ஆர். காந்தி - அதிமுக - இரட்டை இலை
2. டி.கே.ஜி. நீலமேகம் - திமுக - உதயசூரியன்
3. மோ. கார்த்தி - நாம் தமிழர் கட்சி - கரும்பு விவசாயி
4. எம்.என். சரவணன்-சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் - கிரேன்
5. பூ. துரைசாமி - மக்கள் நீதி மய்யம் - டார்ச் லைட்
6. எம். சந்தோஷ் - சுயேச்சை - தர்பூசணி
7. ஆர். சப்தகிரி - சுயேச்சை - செயின்
8. க. செல்வராஜ் - சுயேச்சை - பிரஷர் குக்கர்
9. டி. தினேஷ் பாபு - சுயேச்சை - கிரிக்கெட் மட்டை 
10. பொன். பழனிவேல் - சுயேச்சை - மின் கம்பம்
11. எம். பாபுஜி - சுயேச்சை - கத்திரிக்கோல்
12. அ. ரெங்கசாமி - சுயேச்சை - தொப்பி
13. எம். ரெங்கசாமி - சுயேச்சை - பரிசுப்பெட்டி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com