தென்னை விவசாயிகளின் குறைகளை களைய நடவடிக்கை: திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உறுதி

மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க

மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்றால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். 
பேராவூரணியில்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன்  தலைமை வகித்தார். கூட்டத்தில்,  திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மேலும் பேசியது:
கஜா புயலால் பாதிக்கப்பட்டு தென்னை விவசாயிகள் தவித்தபோது,  தென்னை வாரிய அதிகாரிகளை அழைத்ததற்கு  எவரும் செவிசாய்க்கவில்லை. காரணம், நம்மிடம் அதிகாரம் இல்லை. 
மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால், கல்விக்கடன், விவசாயக்கடன், சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தென்னை வளர்ச்சி வாரியத்தின்  உதவியோடு, இப்பகுதி தென்னை விவசாயிகள் கவலை தீரும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  இப்பகுதியில் மீண்டும் தென்னை மரங்கள்   காய்த்துக் குலுங்கும். தென்னை விவசாயிகள்  வளர்ச்சி பெறுவார்கள் என்றார்.
கூட்டத்தில்,  தி.மு.க ,காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுக, திராவிடர் கழகம், விடுதலைச்சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஒன்றிய பொறுப்பாளர் க. அன்பழகன் வரவேற்றார். சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.கி. முத்துமாணிக்கம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com