தஞ்சாவூர் அருகேகொடுக்கல் - வாங்கல் பிரச்னை: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கொடுக்கல் - வாங்கல் பிரச்னையால் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கொடுக்கல் - வாங்கல் பிரச்னையால் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் அருகேயுள்ள மானோஜிப்பட்டி உப்பரிகை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (41). தொழிலாளி. இவர் சனிக்கிழமை வீட்டின் அருகேயுள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மருத்துவக்கல்லூரி போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று நாகராஜனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகராஜனின் மனைவி ஜமுனாராணி மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், எனது கணவர் நாகராஜன் மீது கொடுக்கல், வாங்கல் தொடர்பாக மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் ஒருவர் புகார் செய்தார். இதன் பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணை முடிந்த பிறகு எனது கணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய சட்டைப் பையில் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், எனது கணவரிடம் ஒருவர் இடம் வாங்கித் தரச் சொல்லி ரூ. 65,000 கொடுத்துள்ளதாகவும், ஆனால் எனது கணவரை மிரட்டி ரூ. 1.80 லட்சம் தர வேண்டும் என எழுதித் தருமாறு கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், மனமுடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். 
எனவே எனது கணவர் சாவுக்கு காரணமான 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com