முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
By DIN | Published On : 15th May 2019 08:45 AM | Last Updated : 15th May 2019 08:45 AM | அ+அ அ- |

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்த நிகழ்வையொட்டி, கடந்த 13ஆம் தேதி இரவு அம்பாள் தவக்கோலம், சிவபெருமான்காட்சியளித்தல் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு திருமண மறைசடங்கு நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. வரும் 17-ம் தேதி வரை ஊஞ்சல் வைபவமும், 18ஆம் தேதி பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.
மே 19ஆம் தேதி மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.