முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
சக்கரபாணி சுவாமி கோயிலில் மே 18இல் தெப்பத் திருவிழா
By DIN | Published On : 15th May 2019 08:41 AM | Last Updated : 15th May 2019 08:41 AM | அ+அ அ- |

கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் வரும் 18ஆம் தேதி தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.
பாஸ்கரஷேத்திரம் என்றழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில், வரும் 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு விசாக நட்சத்திரம் பௌர்ணமி தினத்தில் கோயில் வளாகத்தில் உள்ள
அமிர்த புஷ்கரணியில் விஜயவல்லி, சுதர்சனவல்லித் தாயாரோடு சக்கரபாணி சுவாமி அலங்கரிக்கப்பட்ட சுழலும் சுதர்சன சக்கர தெப்பத்தில் எழுந்தருள உள்ளார்.
தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர் இணைந்து செய்து வருகின்றனர்.