சுடச்சுட

  

  தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுத் திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான தேர் பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
  இந்தப் பேராலயத்தில் ஆண்டுத் திருவிழா மே 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மே 13ஆம் தேதி வரை நவநாள் திருப்பலியும், மறையுரையும் நடைபெற்று வந்தன.
  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திருப்பலியும், மரியா - சமூக அக்கறைக் கொண்ட புரட்சிப் பெண் என்ற தலைப்பில் மறையுரையும் நடைபெற்றது. 
  இதையடுத்து, ஆலயத்தின் முன்னால் மல்லிகை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி மாதா சொரூபம் வைக்கப்பட்டது. இத்தேர் பவனியை கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் எப். அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகளில் தேர் பவனி வந்தது.
  இந்த விழாவில் கும்பகோணம் மறை மாவட்ட முதன்மைக் குரு அமிர்தசாமி,  மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மைக் குரு அந்தோணி ஜோசப்,  பூண்டி மாதா பேராலய அதிபரும்,  பங்குத் தந்தையுமான அ. பாக்கியசாமி, உதவி அதிபர் சு. அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவித் தந்தைகள் ஜேம்ஸ், ஜெயன், ஆன்மிக தந்தைகள் அருளானந்தம், இருதயம் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  இதைத்தொடர்ந்து, புதன்கிழமை காலை மரியா - சிதறுண்ட இதயங்களை ஒன்றிணைப்பவர் என்ற தலைப்பில் மறையுரை நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai