Enable Javscript for better performance
தீவிபத்து நிவாரண உதவி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் அருகே கடந்த 12ஆம் தேதி நேரிட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு புதன்கிழமை அரசு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
    மெலட்டூர் காவல் சரகம்,  நரசிங்க மங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராணி. சத்துணவு சமையலர். கடந்த 12ஆம் தேதி மின் கசிவின் காரணமாக இவரது கூரை வீட்டில் தீப்பற்றியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். ஆனாலும், ராணியின் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருள்கள் தீயில் எரிந்து சேதமானது. 
    இதைத் தொடர்ந்து,  தீவிபத்தில் பாதிக்கப்பட்ட  குடும்பத்தினருக்கு நேரில் சென்று  புதன்கிழமை ஆறுதல் கூறிய  பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன்,  அரசு நிவாரண உதவியாக ரூ. 5 ஆயிரம், வேட்டி,புடவை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர்கள் தர்மராஜ், செல்வராஜ், வருவாய் அதிகாரி கலையரசி, கிராம நிர்வாக அதிகாரி  சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai