உலக டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேராவூரணி வட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பேராவூரணி வட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில், பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி,  குறிச்சி,  காலகம்,  பின்னவாசல் ஆகிய  ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி, டெங்கு விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டு,  டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 
 உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில்  வட்டார மருத்துவ அலுவலர்  வி. செளந்தரராஜன், மருத்துவர்கள் ரஞ்சித், அறிவானந்தம், சேது, சரண்யா, நிஷானி , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் மற்றும் 
சுகாதார ஆய்வாளர்கள் , மருந்தாளுநர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
கும்பகோணத்தில்... கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கிராமத்தில் வட்டாரப் பொது சுகாதாரத் துறை சார்பில் உலக  டெங்கு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த பட்டீசுவரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் பேசுகையில், தற்போது கோடையின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், நம் வீட்டின் தேவைக்காகக் குடிநீரை பல்வேறு பாத்திரங்களில் சேமித்து வைக்கிறோம். பல்வேறு வேலைகளுக்காக நீரை சேமிக்கிறோம். 
அவ்வாறு சேமித்து வைக்கும் நீரில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்கள் அமர்ந்து ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான முட்டைகளை இடும். அவை ஏழாம் நாள் முதிர்ந்த கொசுக்களாக மாறி, காய்ச்சல் உள்ள ஒருவரை கடித்து மற்றவர்களைக் கடிக்கும்போது காய்ச்சல் பரவும். எனவே அனைவரும் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடிப் பாதுகாக்க வேண்டும். 
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலை கண்டறியும் ரத்தப் பரிசோதனை இலவசமாகச் செய்து தரப்படுகிறது. இதை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் சங்கரன்.
மேலும், டெங்கு மனிதன் போன்று வேடமிட்டு,  பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் விஜயேந்திரன், வீரமணி, சிவகுமார், செந்தில்குமார், செளந்தரராஜன், கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com