முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
முத்து மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு
By DIN | Published On : 18th May 2019 09:10 AM | Last Updated : 18th May 2019 09:10 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் கரந்தை காசி பண்டிதர் குளத்தெருவில் உள்ள அன்பில் மகா முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா மே 15-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இரவு முதல் கால யாக பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. பின்னர், 16-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகள், ஹோமங்கள், தீபாராதனை உள்ளிட்டவையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகள், கோயில் மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், மஹா பூர்ணாஹூதி உள்ளிட்டவையும் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் யாகசாலை பூஜைகள், பிம்ப சுத்தி ரக்ஷபந்தனம், 9 மணியளவில் மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, 9.30 மணியளவில் யாத்திராதனம், கடம் புறப்பாடு ஆகியவையும், 10.15 மணியளவில் கருவறை, பரிவார தெய்வங்களுக்குக் குடமுழுக்கு விழாவும், தீபாராதனையும் நடைபெற்றன. பின்னர், காலை 10.30 மணியளவில் திருவருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. சனிக்கிழமை முதல் மண்டல பூஜை நடைபெறவுள்ளது.