அம்மாபேட்டையில் மழை வேண்டி வழிபாடு
By DIN | Published On : 20th May 2019 08:32 AM | Last Updated : 20th May 2019 08:32 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையில் இயங்கி வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் வழிபாட்டு மன்றத்தில் மழை வேண்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி வழிபாட்டு மன்றத்தில் செவ்வாடை பக்தர்கள் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை செய்தனர். பின்னர் மழை வேண்டியும், உலகில் அமைதி நிலவ வேண்டியும் கூட்டு வழிபாடு, தியானம் மேற்கொண்டனர்.