கமல்ஹாசன் பேச்சில் அரசியல் உள்நோக்கம்
By DIN | Published On : 20th May 2019 08:28 AM | Last Updated : 20th May 2019 08:28 AM | அ+அ அ- |

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேச்சில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றார் பாஜக தேசியச் செயலர் எச். ராஜா.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்தது: கமல்ஹாசன் இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான் என்று கூறியுள்ளார். இதில் அரசியல் உள் நோக்கம் உள்ளது. பின்னர் திருப்பரங்குன்றத்தில் பேசும்போது தான் ஒரு இந்து குடும்பம் எனக் கூறுகிறார். இந்தியாவின் பெருமிதங்களைத் தொகுத்து முன்னாள் பிரதமர் நேரு ஒரு புத்தகம் எழுதச் சொன்னார். அதில் இந்தியா உலகில் உள்ள அனைவருக்கும் தாய் என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இந்தியாவை பற்றி பெருமையாகக் கூறப்பட்டுள்ளது. இந்து மதம் அனைத்து மதங்களையும் அரவணைத்து செல்லும் மதம் என வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் ராஜா.