தஞ்சாவூர் மாவட்டத்தில்  மே 30-இல் ஜமாபந்தி தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களிலும் மே 30-ம் தேதி ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) தொடங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களிலும் மே 30-ம் தேதி ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட தஞ்சாவூர்,  பூதலூர்,  திருவையாறு,  பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய ஒன்பது வட்டங்களிலும் வட்டாட்சியர் 
அலுவலகங்களில் மே 30-ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெறவுள்ளது. 
தஞ்சாவூர் வட்டத்தில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆட்சியர் தலைமையிலும், பூதலூர் வட்டத்தில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், திருவையாறு வட்டத்தில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை தஞ்சாவூர் கோட்டாட்சியர் தலைமையிலும், பாபநாசம் வட்டத்தில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை கும்பகோணம் கோட்டாட்சியர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
பட்டுக்கோட்டை வட்டத்தில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் தலைமையிலும், பேராவூரணி வட்டத்தில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) தலைமையிலும்,  ஒரத்தநாடு வட்டத்தில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 13-ம் தேதி வரை மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், கும்பகோணம் வட்டத்தில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) தலைமையிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
இந்த ஜமாபந்தி சனி, ஞாயிறு, திங்கள்கிழமை நீங்கலாக நாள்தோறும் காலை 9 மணி முதல் நடைபெறும். ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் பட்டா மாறுதல்,  எல்லை பிரச்னைகள், பொதுமக்கள் வீட்டு மனை ஒப்படை, நில ஒப்படை, முதியோர் உதவித் தொகை ஆகிய 
கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு அளித்து தீர்வு காணலாம். 
மேலும், ஜமாபந்தி நிறைவு நாளன்று அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் பொதுப் பணித் துறை (நீர் வள ஆதாரம்), வேளாண்மைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, புள்ளியியல் துறை ஆகியவற்றின் 
உட்கோட்ட அலுவலர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பாசனம் தொடர்பான கருத்துருக்கள், முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை விவசாயிகள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com