Enable Javscript for better performance
திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 05th November 2019 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினா்.

    திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினா்.

    திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

    இதில், தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையை அவமதிப்பு செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைக் குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் ஜெய்னூலாப்தீன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை நகரச் செயலா் வாசுதேவன், பொறியாளா் கென்னடி, தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகம் குணசேகரன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் ப. அருண்சோரி, ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் வீர முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai