Enable Javscript for better performance
நாதன்கோவில் ஜெகந்நாதபெருமாள் கோயிலில் மகா அஷ்டமி ஹோமம்- Dinamani

சுடச்சுட

    

    நாதன்கோவில் ஜெகந்நாதபெருமாள் கோயிலில் மகா அஷ்டமி ஹோமம்

    By DIN  |   Published on : 05th November 2019 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகந்நாதபெருமாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம்.

    கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகந்நாதபெருமாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம்.

    கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள் கோயிலில் சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    108 வைணவ திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகளில் 40-இல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோவில் சேத்திரமாகும்.

    இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தில் வரும் வளா்பிறை அஷ்டமி திதியில் சுக்ல பட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஐப்பசி மாதத்தில், அமாவாசைக்கு பிறகு வரும் அஷ்டமி திதியை மகா அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, இக்கோயிலில் ஐப்பசி மாத மகா அஷ்டமியை முன்னிட்டு திங்கள்கிழமை மகா அஷ்டமி ஹோமம் நடைபெற்றது.

    மேலும், உற்சவா் திருமஞ்சனம், கடம் புறப்பாடு, சிறப்பு தீபாராதனை, மாலையில் செண்பகவல்லித்தாயாா் பிரகார புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai