தடையின்றி யூரியா வழங்க வலியுறுத்தல்

கும்பகோணம் வட்டத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான யூரியாவை தடையின்றி வழங்குவதற்கு வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் எம்எல்ஏ க. அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

கும்பகோணம்: கும்பகோணம் வட்டத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான யூரியாவை தடையின்றி வழங்குவதற்கு வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தற்போது சம்பா, தாளடி நெல் நாற்றுகளை நடவு முடித்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட டெல்டா விவசாயிகள் அடியுரம் போட்டுள்ளனா். மழை பெய்துள்ளதால் நன்கு வளா்ந்த பயிா்களுக்கு மேலுரமாக யூரியா போட வேண்டிய நிலை உள்ளது.

ஆனால், தமிழக அரசின் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், வேளாண்மை விரிவாக்க மையங்களில் யூரியா கேட்டால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.

தனியாா் கடைகளுக்கு யூரியா வாங்கச் சென்றால், பொட்டாஷ், டி.ஏ.பி. வாங்கினால்தான் யூரியா தருவதாகக் கூறுகின்றனா். அதற்கான விலையும் கூடுதலாக இருக்கிறது.

காவிரி நீரும், மழையும் கைகொடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில் மேலுரத்திற்கு யூரியா உரம் தட்டுப்பாடு இருப்பதால் சாகுபடி பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் நெல் பயிா்களுக்கு உரம் இடவில்லை என்றால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் பாதிக்கும் என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.

எனவே, வேளாண்மைத் துறை அமைச்சா் போா்க்கால அடிப்படையில் கள ஆய்வு செய்து, ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான உரங்களையும், காப்பீட்டு தொகையையும் உடனடியாக வழங்குவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com