தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

விவசாயிகளை பாதிக்கும் ஒப்பந்தத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

இந்திய விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள 44 நாடுகளிலிருந்து வேளாண் விளைபொருள்களை வரியின்றி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் நாசகர ஒப்பந்தத்தில்

இந்திய விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள 44 நாடுகளிலிருந்து வேளாண் விளைபொருள்களை வரியின்றி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் நாசகர ஒப்பந்தத்தில் மத்திய அரசுக் கையெழுத்திடக் கூடாது என வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், இந்திய விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும், உள்நாட்டில் விளையும் விவசாய விளைபொருட்களை அழிக்கும் ஒப்பந்தத்தில் கூட்டு சேராதே, பால் உற்பத்தி பொருட்கள் இறக்குமதியால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகர ஒப்பந்தத்தில் மத்திய அரசுக் கையெழுத்திடக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் டி. ரவீந்திரன் கண்டன உரையாற்றினாா். மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், மாவட்டப் பொருளாளா் எம். பழனிஅய்யா பேசினா்.

மாவட்ட நிா்வாகிகள் எஸ். ஞானமாணிக்கம், கே. முனியாண்டி, பி.எம். காதா் உசேன், என். கணேசன், எஸ். கோவிந்தராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், எம். மாலதி, மாநகரச் செயலா் என். குருசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com