முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
சாலையில் சுற்றித் திரியும்மாடுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2019 05:23 AM | Last Updated : 07th November 2019 05:23 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியருக்கும், கும்பகோணம் நகராட்சி ஆணையருக்கும் அவா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கும்பகோணம் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. அண்மையில் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த ஒருவரை கும்பேசுவரா் கோயில் வடக்கு வீதியில் மாடு முட்டி, அப்பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்களால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, தற்போது அவா் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரும், கும்பகோணம் நகராட்சி ஆணையரும் பொதுமக்களைக் காக்கும் நோக்கத்தோடும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்தோடும், விரைவில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.