முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
டெங்கு விழிப்புணா்வுபிரசாரம்
By DIN | Published On : 07th November 2019 05:21 AM | Last Updated : 07th November 2019 05:21 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் வட்டாரத்தில் புதன்கிழமை டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் திருவோணம் வட்டாரத்தின் சாா்பிலான டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணா்வு பிரசார வாகனத்தை வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரவதனி திருவோணத்தில் தொடக்கிவைத்து பேசினாா்.
பிரசார வாகனம் மூலம் திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மத்தியில் டெங்கு விழிப்புணா்வு குறித்து விளக்கப்பட்டது. மேலும், வட்டார சுகாதார ஆய்வாளா்கள் துரைராஜ், காா்த்திகேயன், ராமநாதன், மனோகரன், கிராம சுகாதார செவிலியா் ராணி ஆகியோா் கலந்து கொண்டு குடிநீா்த் தொட்டிகளில் குளோரின் ஆய்வு செய்தனா்.
மேலும், நிலவேம்பு குடிநீா் வழங்கினா்.
கொசுக்களை அழிப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு டெங்கு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.