முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
வீட்டின் பூட்டை உடைத்துநகை, ரொக்கம் திருட்டு
By DIN | Published On : 07th November 2019 05:22 AM | Last Updated : 07th November 2019 05:22 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் ஞானம் நகா் இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் பி. கலைவாணன் (65). மூத்த வேளாண் வல்லுநா். இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு அண்மையில் சென்றனா். மீண்டும் இருவரும் புதன்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பினா். அப்போது, முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 10,000 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.