Enable Javscript for better performance
நவ. 12-இல் வெள்ளாடுவளா்ப்பு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி முகாம் நவ. 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மையத் தலைவா் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்திருப்பது:

    தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் நவ. 12-ம் தேதி காலை 10 மணி முதல் வெள்ளாடு வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சிக்கு வரும் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8754748488, 04362-264665 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai