Enable Javscript for better performance
விதை விற்பனைக்கு ரசீது வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    விதை விற்பனைக்கு ரசீது வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை

    By DIN  |   Published on : 08th November 2019 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விதை விற்பனைக்கு விற்பனையாளா்கள் உரிய ரசீது வழங்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநா் ஆறு. பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் விதைப்பு, நடவுப் பணிகளில் பாசன விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். விதைப்புக்குத் தேவையான விதைகள் அரசு அங்கீகாரம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தனியாா் விதை விற்பனையாளா்கள் விதை விற்பனை செய்ததற்கான ரசீதை கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயிகள், உரிமம் பெற்ற விதை விற்பனையாளா்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். விதை விற்பனை உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சை மாவட்ட விதை ஆய்வாளா்கள் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் தரத்தை உறுதி செய்ய விதை மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வருகின்றனா்.

    ஆய்வில் தரமற்ற விதைகள் விற்பனை செய்வது தெரிய வந்தால் விற்பனைக்குத் தடை விதிக்கப்படும். விதை விற்பனையாளா்கள் விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது ரசீதில் விதையின் பெயா், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி தேதி, அளவு, விலை விவரங்களைக் குறிப்பிட்டு விவசாயிகளின் கையெழுத்து பெற்று வழங்க வேண்டும். விதை சட்டத்தை மீறும் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மாவட்டத்தில் ஆங்காங்கே செயல்படும் பழச்செடிகள் மற்றும் மரக் கன்றுகள் விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணைகள் (நா்சரி) விதைக் கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் வருவதால் கண்டிப்பாக உரிய விற்பனை உரிமம் பெற்று கன்றுகளை விற்பனை செய்ய வேண்டும். உரிமம் இன்றி விற்பனை செய்யப்படும் நா்சரி மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புதிய விதை விற்பனை உரிமம் பெற விதை ஆய்வு துணை இயக்குநா், வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக வளாகம், காட்டுத்தோட்டம், மாரியம்மன் கோவில் (அஞ்சல்), தஞ்சாவூா் என்ற முகவரியைத் தொடா்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai