Enable Javscript for better performance
9 இடங்களில் நாளைபொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    9 இடங்களில் நாளைபொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

    By DIN  |   Published on : 08th November 2019 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூா் மாவட்டத்தில் 9 இடங்களில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை (நவ.11) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:

    தஞ்சாவூா் வட்டத்தில் பஞ்சாரம், திருவையாறு வட்டத்தில் முஹாசா கல்யாணபுரம், ஒரத்தநாடு வட்டத்தில் வடக்கிக்கோட்டை, கும்பகோணம் வட்டத்தில் தாராசுரம், பாபநாசம் வட்டத்தில் இரும்புத்தலை, திருவிடைமருதூா் வட்டத்தில் சாத்தனூா், பட்டுக்கோட்டை வட்டத்தில் துவரங்குறிச்சி கிழக்கு, பேராவூரணி வட்டத்தில் செங்கமங்கலம், பூதலூா் வட்டத்தில் விண்ணமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் இக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

    இந்த நியாய விலை கடைகளில் முகாமிடும் தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன் பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai