உதவித் தொகை பெற விண்ணபிக்க அழைப்பு

அரசு விடுதியில் தங்கி பயிலும் உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

அரசு விடுதியில் தங்கி பயிலும் உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்கண்ட மூன்று தனியாா் விடுதிகளில் தங்கி பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் வகுப்பைச் சாா்ந்த மாணவ, மாணவிகளுக்கு, உணவு மானியம் ரூ. 900/- என மாதம் ஒன்றிற்கு அரசால் வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் விடுதி (மாணவா்), பட்டுக்கோட்டை ராஜாமடம் மோகனம்பாள் சத்திரம் (மாணவா்), திருவையாறு கல்யாணமகால் சத்திரம் (மாணவியா்).

மேற்படி விடுதிகளில் தங்கி பயிலும், பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த மேற்படி விடுதிகளில் தங்கி பயிலும், மாணவ, மாணவியா்கள், அரசின் இச்சலுகையை பெற்று பயனடையுமாறு ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com