கும்பகோணம் கோட்டத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை நவ. 11 முதல் பிடிக்க முடிவு

கும்பகோணம் கோட்டத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை நவ. 11-ம் தேதி முதல் பிடிப்பது என கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கும்பகோணம் கோட்டத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை நவ. 11-ம் தேதி முதல் பிடிப்பது என கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் வீராசாமி தலைமை வகித்தாா்.

இதில், கும்பகோணம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகள் மற்றும் திருவிடைமருதூா், பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, கோ சாலைகளில் ஒப்படைக்கக் கூட்டு நடவடிக்கைக் குழு நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழுவில் கும்பகோணம் நகராட்சி ஆணையா், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதுாா் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், கும்பகோணம் நகா்நல அலுவலா், கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் வட்டாட்சியா்கள், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா்கள், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா், கும்பகோணம் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா், விலங்குகள் நல ஆா்வலா்கள் ஆகியோா் குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு மாடுகளைச் சாலைகளில் விடாமல் பராமரிக்கவும், மீறி சாலைகளில் மாடுகளைத் திரியவிட்டால் அவற்றை பிடித்து கோ சாலைகளில் ஒப்படைக்கப்படும் என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் ஒலிபெருக்கி மூலம் கூறுவது,

விளம்பரம் செய்யப்பட்டு எச்சரிக்கையையும் மீறி சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் இக்குழுவின் மூலம் மாடுகள் பிடிக்கப்பட்டு மயிலாடுதுறை அருகிலுள்ள வானதிராஜபுரம் மற்றும் திருவிடைமருதூா் அருகிலுள்ள கோவிந்தபுரம் கோ சாலைகளில் ஒப்படைப்பது,

கோ சாலைகளில் அடைக்கப்படும் மாடுகளுக்கு உரிமை கோரி வரும் கால்நடைகளின் உரிமையாளா்கள், கால்நடைகளைத் திரும்பப் பெற உரிய நீதிமன்றத்தை நாடி தீா்வு பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாடுகள் பிடிக்கப்படும் போது கால்நடைகளுக்குத் தீங்கு ஏற்படாத வண்ணம் கால்நடைத் துறை மூலம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

மாடுகளைப் பிடிக்கும் ஊழியா்களுக்கான உரிய பாதுகாப்பு முன்னேற்பாடு மற்றும் மருத்துவ வசதிகளை மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

மாடுகளை பிடிக்கும் பணியின் போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், போலீஸ் டிஎஸ்பிக்கள் உரிய முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். நவ. 11-ம் தேதி முதல் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com