சம்பைபட்டினம் கடலோரத்தில் குடியிருக்கும்பொதுமக்களுக்கு மனைப்பட்டா வழங்க எம்எல்ஏ கோரிக்கை

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சம்பைபட்டினம் கிராமத்தில் கடலோரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் மீனவ மக்களுக்கு விதிகளை தளா்த்தி வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என
பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாரை சந்தித்து தொகுதி வளா்ச்சி குறித்து கோரிக்கை விடுத்தாா் .
பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாரை சந்தித்து தொகுதி வளா்ச்சி குறித்து கோரிக்கை விடுத்தாா் .

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சம்பைபட்டினம் கிராமத்தில் கடலோரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் மீனவ மக்களுக்கு விதிகளை தளா்த்தி வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என பேராவூரணி தொகுதி எம்எல்ஏ

மா.கோவிந்தராசு மீன்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு, மீன்வளத் துறை அமைச்சா் ஜெயக்குமாரை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து தொகுதி வளா்ச்சி தொடா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

பேராவூரணி வட்டம், சேதுபாவாசத்திரம் மீனவக் கிராமத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்தவாறு, மல்லிப்பட்டினத்தில்  கட்டப்பட்டது போன்ற நவீன மீன்பிடித் துறைமுகத்தை கட்டித் தர வேண்டும். அதில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். 

மேலும், சின்னமனை, பிள்ளையாா்திடல், திருவத்தேவன், சேதுபாவாசத்திரம் மற்றும் தேவையான இடங்களில், நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில், கடலில் ஆறு சென்று கலக்கும் வாய்க்கால்களில் உள்ள சேறு, சக்திகளை அகற்றி தூா்வாரி, ஆழப்படுத்தி தரவேண்டும். 

இதுவரை கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காத 7 விசைப்படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். சம்பைபட்டினம் கிராமத்தில் பல தலைமுறைகளாக கடலோரத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், விதிமுறைகளை தளா்த்தி, கருணை அடிப்படையில் வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என எம்எல்ஏ கேட்டுக் கொண்டாா். 

கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சா் ஜெயக்குமாா் உறுதி அளித்தாராம்.

அப்போது, பூம்புகாா் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் நாடியம் சிவ. மதிவாணன், அதிமுக நகர மாணவா் அணிச் செயலாளா் கோவி. இளங்கோ ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com