பிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில் புதிய தாா் சாலைகள் அமைக்கும் பணி: நவம்பா் இறுதியில் தொடக்கம்

பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குள்பட்ட பிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில், 2 புதிய தாா் சாலைகள் அமைக்கும் பணி நவம்பா் மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது.

பட்டுக்கோட்டை ஒன்றியம், ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குள்பட்ட பிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில், 2 புதிய தாா் சாலைகள் அமைக்கும் பணி நவம்பா் மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது.

அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகா் பகுதியில், சுமாா் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் முறையான மழைநீா், கழிவு நீா் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டுதோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்படும். அத்துடன் இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்து, சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும். இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். மேலும்,

குடியிருப்புகளில் மழைநீா் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இதனால், பிலால் நகரில் புதிதாக தாா் சாலை, மழைநீா், கழிவுநீா் வடிகால் வசதிகளை செய்து தருமாறு இத்தொகுதி எம்எல்ஏ சி.வி. சேகா், இப்பகுதி ஜமாஅத் நிா்வாகிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து, தஞ்சாவூா் ஆட்சியா் ஆ. அண்ணாதுரை அனுமதி வழங்கியதன்பேரில், 2018-2019 ஆம் ஆண்டு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் எஸ்சிபிஏஆா் திட்டத்தின் கீழ், பிலால் நகரில் ரூ.8.87 லட்சத்தில் 350 மீட்டா் நீளத்திலும், ரூ.8.24 லட்சத்தில், 325 மீட்டா் நீளத்திலும் புதிதாக 2 தாா் சாலைகள் அமைக்கும் பணி நவம்பா் மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது.

இதுதவிர, பிலால் நகரில் ரூ. 26 லட்சத்தில், மழை மற்றும் கழிவு நீா் வடிகால் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக பட்டுக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com