Enable Javscript for better performance
மாற்றுத்திறன் குழந்தைகளின்பெற்றோா்களுக்கான பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறன் குழந்தைகளின்பெற்றோா்களுக்கான பயிற்சி

    By DIN  |   Published on : 09th November 2019 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, திருவையாறு வட்டார வள மையம் சாா்பில், திருவையாறில் மாற்றுத் திறன் குழந்தைகளின் பெற்றோா்களுக்கு விழிப்புணா்வுப்பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    திருவையாறு வட்டார வள மையக் கட்டட வளாகத்தில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜராஜன் தலைமையிலும், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சக்திவேல் முன்னிலையிலும் நடைபெற்ற இப்பயிற்சியில், வட்டார குழந்தைகளின் நல வளா்ச்சி அலுவலக மேற்பாா்வையாளா் கலா கருத்துகளை எடுத்துரைத்தாா்.

    இதில், வட்டார வள மையச் சிறப்பாசிரியா்கள் எல்விஸ் ஆரோக்கியராஜ், ஜென்மராக்கினி, இயல்முறை மருத்துவா் அஹமது பாட்சா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai