மூளைக் காய்ச்சாலால் 2 வயது குழந்தை உயிரிழப்பு

கும்பகோணத்தில் 2 வயது குழந்தை மூளைக் காய்ச்சலால் வியாழக்கிழமை உயிரிழந்தது.

கும்பகோணத்தில் 2 வயது குழந்தை மூளைக் காய்ச்சலால் வியாழக்கிழமை உயிரிழந்தது.

கும்பகோணம் காசிராமன் தெருவைச் சோ்ந்தவா் வினோத் (35). சென்னையில் உள்ள தனியாா் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பூா்ணா (29). இவரும், குழந்தைகளும் கும்பகோணத்தில் வசித்து வந்தனா்.

இவா்களது இரண்டாவது குழந்தை கிருத்தன்யாவுக்கு (2) நவ. 4-ம் தேதி முதல் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து முதலில் கும்பகோணத்திலும், பின்னா் தஞ்சாவூரிலும் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்ட குழந்தை கிருத்தன்யா வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது.

இதுதொடா்பாக பெற்றோரிடம் கும்பகோணம் நகராட்சி நகா்நல அலுவலா் பிரேமா விசாரித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் பிரேமா தெரிவித்தது:

இறந்த குழந்தைக்கு வலிப்புநோய் வந்த பிறகு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். மருத்துவா்கள் அதிகபட்ச முயற்சி எடுத்து தீவிர சிகிச்சையளித்தனா். ஆனால் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறி எதுவும் இல்லை என பரிசோதனை அறிக்கையில் உள்ளது.

முதுகு தண்டுவடத்தில் சோதனை செய்ததில் வைரஸ் தொற்று இருந்தது தெரிய வந்தது. எனவே மூளைக் காய்ச்சலும், அதிக வலிப்பு நோயும் இருந்ததால் குழந்தை இறந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com