Enable Javscript for better performance
அருந்தவபுரத்தில் கோமாரி நோய்க்கு தடுப்பூசி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அருந்தவபுரம் ஊராட்சியிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    அருந்தவபுரம் கால்நடை மருத்துவமனை மருத்துவா் எம். குணசீலன் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டு சிகிச்சை அளித்தாா். பின்னா் அவா் கூறுகையில்,

    கடந்த அக். 14 தொடங்கி நடைபெற்று முகாமில் அருந்தவபுரம் கால்நடை மருத்துவமனைக்குட்பட்ட சுமாா் 27 கிராமங்களில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai