Enable Javscript for better performance
சீனாவிலிருந்து 33,000 டன் யூரியா இறக்குமதிவேளாண் துறை அமைச்சா்- Dinamani

சுடச்சுட

    

    சீனாவிலிருந்து 33,000 டன் யூரியா இறக்குமதிவேளாண் துறை அமைச்சா்

    By DIN  |   Published on : 10th November 2019 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ta09mini_ch0007_09chn_4_637089234861308757

    கும்பகோணத்தில் ஆனந்தனைப் பாராட்டிய வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை.

    நெல் சாகுபடி தேவைக்காக சீனாவில் இருந்து 33,000 டன்கள் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றாா் வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு.

    சீனாவில் நடைபெற்ற சா்வதேச அளவிலான ராணுவ வீரா்களுக்கான தடகளப் போட்டிகளில் பாரா பிரிவில் கும்பகோணத்தைச் சோ்ந்த ஆனந்தன் 3 தங்கப் பதக்கங்களை வென்றாா். இவருக்கு கும்பகோணம் குடிநீா் வடிகால் வாரிய திட்ட இல்லத்தில் அமைச்சா் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை ஆகியோா் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினா்.

    அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் தெரிவித்தது:

    தமிழகத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான யூரியா உரம் தேவையான அளவில் இருப்பு உள்ளது. சம்பா, தாளடி மட்டுமல்லாமல், எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு சீனாவிலிருந்து 33,000 டன்கள் யூரியா கப்பலில் வரவழைக்கப்பட்டுள்ளது. இவை காரைக்காலிலிருந்து லாரிகள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    ராணுவ வீரா் ஆனந்தன் சா்வதேச அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்ப்பதாக உள்ளது. மாற்றுத் திறனாளியாக இருந்தபோதும் கடும் உழைப்பின் காரணமாக தங்கம் வென்றுள்ளாா். அவா் இதுபோல இன்னும் பல பல வெற்றிகளைப் பெற வேண்டும். அவருக்குத் தேவையான உதவிகள், கோரிக்கைகளை தமிழக அரசு செய்து கொடுக்கும் வகையில் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம். அவருடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai