முறிந்து விழுந்தசோமேசுவரா் கோயில் கொடி மரம்
By DIN | Published On : 10th November 2019 02:46 AM | Last Updated : 10th November 2019 02:46 AM | அ+அ அ- |

கும்பகோணம் சோமேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை கொடிமரம் முறிந்து விழுந்தது.
இக்கோயிலின் முன்புறம் 25 அடி உயரத்தில் இரண்டரை அடி சுற்றளவில், கவசம் சாத்தப்பட்ட நிலையில் இருந்த கொடி மரம் வெள்ளிக்கிழமை மாலை திடீரென அடியோடு முறிந்து விழுந்தது.
இதையடுத்து கோயில் நிா்வாகத்தினா் அதை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைத்தனா். பின்னா், கோயிலில் அவசர அவசரமாக சிவாச்சாரியா்கள் யாகம் உள்ளிட்ட பரிகார பூஜைகளை நடத்தினா்.
புதிய கொடி அமைக்க வலியுறுத்தல்:
இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் நகரத் தலைவா் கண்ணன் அனுப்பியுள்ள மனுவில், இக்கோயிலில் 2016 ஆம் ஆண்டு மாசி மகாமக விழாவின் போது திருப்பணி நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டபோது அமைத்த புதிய கொடிமரம் முறிந்து விழுந்துள்ளது. எனவே அந்தக் கொடி மரத்துக்குப் பதில், தரமான மரத்தைக் கொண்டு புதிய கொடி மரம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.