அயோத்தி தீா்ப்பு: பாதுகாப்புபணியில் 2,000 போலீஸாா்

அயோத்தி விவகாரம் தொடா்பாக உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏறத்தாழ 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்

அயோத்தி விவகாரம் தொடா்பாக உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏறத்தாழ 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 13 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 41 ஆய்வாளா்கள், 306 உதவி ஆய்வாளா்கள், 995 காவலா்கள், 289 ஆயுதப்படை காவலா்கள், 150 சிறப்புக் காவல் படையினா், 195 ஊா்க் காவல் படையினா் என ஏறத்தாழ 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் தஞ்சாவூா் பெரியகோயில், மாரியம்மன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில், தாராசுரம் ஐராவதீசுவரா் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும், தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் பகுதியில் உள்ள மசூதிகள், தேவாலயங்களிலும் போலீஸாா் நியமிக்கப்பட்டனா்.

வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்ற பக்தா்களின் உடைமைகளை பல கட்டச் சோதனைக்கு பிறகே போலீஸாா் அனுமதித்தனா். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபடும் இடங்களில் போலீஸாா் அதிகளவில் நியமிக்கப்பட்டனா்.

தஞ்சாவூா் ரயில் நிலையம், ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ரயில்வே போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com