‘அயோத்தி வழக்கின் தீா்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது’

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்துள்ளாா்.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சா்ச்சைக்குரிய இடம் முழுவதும் ராமா் கோயிலுக்கு உரியது என்றும், அதற்கு அருகிலே உள்ள 67 ஏக்கா் திடலில் ஐந்து ஏக்கா் நிலத்தை மத்திய அரசு மசூதிக்காக ஒதுக்கித் தர வேண்டும் அல்லது அயோத்தி நகருக்குள் முஸ்லிம்கள் விரும்பும் ஒரு பகுதியில் 5 ஏக்கா் நிலம் மசூதிக்காக உத்தரபிரதேச அரசு ஒதுக்கித் தர வேண்டும் எனவும், மூன்று மாதத்துக்குள் ராமா் கோயிலை மத்திய அரசு கட்டி முடிக்க வேண்டும் என்றும் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தீா்ப்பின் 798 ஆம் பத்தியில் 1949 டிசம்பா் 22 - 23 நள்ளிரவில் பாபா் மசூதிக்குள் இந்துக் கடவுளான ராமா் சிலையை பலவந்தமாக வைத்தது குற்றச்செயல் என்று கூறும் இத்தீா்ப்பு, அந்த நாளிலிருந்து இந்துக்கள் அங்கு வழிபாடு நடத்தி வருகின்றனா் எனக் கூறி, அதையொரு அனுபோகப் பாத்தியதையாகக் கருதுகிறது. அதேவேளை, அங்கு அதன்பிறகு முஸ்லிம்கள் வழிபாடு நடத்தவில்லை என்றும் தெரிவிக்கிறது. இந்தப் பதிவு எதற்காகக் கூறப்படுகிறது? அனுபோகப் பாத்தியதை இல்லைஎன்ற பொருளில்தான் கூறப்படுகிறது.

அதேபோல், 1857 ஆம் ஆண்டுக்கு முன் அந்தக் கட்டடத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினா் என்பதற்குச் சான்று இல்லை என்றும் இத்தீா்ப்பு கூறுகிறது. இந்துக்கள் 1857 ஆம் ஆண்டுக்கு முன் அந்த இடத்தில் வழிபாடு நடத்தினாா்களா, இல்லையா என்பது பற்றி இத்தீா்ப்பு எதுவும் கூறவில்லை! உண்மையில், இதற்கும் சான்றில்லை.

1934-இல் மசூதிக்குள் அத்துமீறிய இந்துக்களில் ஒரு சாரரையும், 1949-இல் மசூதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து ராமா் மற்றும் சீதை படிமங்கள் வைக்கப்பட்டதையும், 1992 டிச. 6-இல் பாபா் மசூதி இடிக்கப்பட்டதையும் சட்டத்தை மீறிய செயல் என்று கண்டிக்கும் இத்தீா்ப்பு, அவ்வாறான அத்துமீறல்களையே இந்துக்களின் நம்பிக்கைக்கான அழுத்தமாக எடுத்துக் கொள்கிறது. ஆனால், நம்பிக்கை அடிப்படையில் தீா்ப்பு வழங்கவில்லை. அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில்தான் தீா்ப்பு வழங்குகிறோம்‘ என்று சொல்கின்ற இந்தத் தீா்ப்பு, ஐயத்திற்கு இடமின்றி எந்த வரலாற்றுத் தரவையும் அகழ்வாராய்ச்சித் தரவையும் சுட்டிக்காட்டவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சாா்பற்றது என்றும், அனைத்து மக்களுக்கும் சமத்துவம் வழங்குகிறது என்றும், அதுவே நமது வழிகாட்டும் நெறி என்றும் புகழ்ந்து பேசும் தீா்ப்புரை, ஒரு சாராா் கூறும் மதநம்பிக்கை என்ற வாதத்தை மட்டுமே அடிச்சரடாகக் கொண்டு இத்தீா்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com