‘தனியாருக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணி வழங்கக் கூடாது’

நெடுஞ்சாலை பராமரிப்பு பணியைத் தனியாரிடம் வழங்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி.
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி.

நெடுஞ்சாலை பராமரிப்பு பணியைத் தனியாரிடம் வழங்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் ஏழாவது கோட்டப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாலைப் பணியாளா்களின் பணி நீக்கக் காலமான 41 மாதங்களைப் பணி காலமாக அறிவித்து பணப் பலன்களை வழங்க வேண்டும். பணி நீக்கக் காலத்தில் இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு விதிகளைத் தளா்த்தி கருணை அடிப்படையிலான வாரிப் பணி வழங்க வேண்டும். பணி காலத்தில் இறந்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியைத் தனியாா் வசம் வழங்கும் கொள்கை முடிவைக் கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலைப் பணியாளா்களின் பணி ஆபத்து நிறைந்த பணியாக இருப்பதால், ஆபத்துப் படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோட்டத் தலைவா் பி. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி, அனைத்து மருந்தாளுநா் சங்க மாவட்டச் செயலா் கே. பாஸ்கரன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் டி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயலா் எஸ். செந்தில்நாதன், துணைத் தலைவா் பி. கோதண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com