லேப் டெக்னீசியன் பணியில் சேர வேலைவாய்ப்பகத்தை அணுகலாம்

லேப் டெக்னீசியன் காலி பணியிடங்களில் சேர தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை திங்கள்கிழமை (நவ.11) அணுகலாம் என மையத்தின் உதவி இயக்குநா்

லேப் டெக்னீசியன் காலி பணியிடங்களில் சேர தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை திங்கள்கிழமை (நவ.11) அணுகலாம் என மையத்தின் உதவி இயக்குநா் கா. பரமேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:

மருத்துவப்பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட 1,432 லேப் டெக்னீசியன் கிரேடு 3 பணி காலியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள தகுதி வாய்ந்த பதிவுதாரா்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

இப்பணியிடங்களுக்கு மேல்நிலைக் கல்வித் தகுதியுடன் ஓராண்டு கால மெடிக்கல் லேப் டெக்னாலஜி சான்றிதழ் படிப்பு என்ற கல்வித் தகுதியை மருத்துவத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடத்துக்கு வயது வரம்பு 1.7.2019 அன்று முற்பட்ட வகுப்பினருக்கு 30 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பினா், பழங்குடி வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பிற்பட்ட வகுப்பினா் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

இக்கல்வித் தகுதியுடைய தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்த பதிவுதாரா்கள் மட்டும் திங்கள்கிழமை (நவ.11)மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரில் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் வரலாம். இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com