பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்குகிறாா் பேரூராட்சி முன்னாள் தலைவா் என். அசோக்குமாா்.
பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்குகிறாா் பேரூராட்சி முன்னாள் தலைவா் என். அசோக்குமாா்.

பேராவூரணியில் ஊரணி சுகாதாரம், கல்வி அறக்கட்டளைத் தொடக்கம்

பேராவூரணியில் ஊரணி சுகாதாரம் மற்றும் கல்வி அறக்கட்டளைத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி: பேராவூரணியில் ஊரணி சுகாதாரம் மற்றும் கல்வி அறக்கட்டளைத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 பேராவூரணி பகுதி மக்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வுபெற்ற அலுவலா்கள், இளைஞா்கள் ஒன்றிணைந்து இந்த அறக்கட்டளையைத் தொடக்கியுள்ளனா்.

இதன் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளையின் கெளரவத் தலைவராக போரவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவா் என். அசோக்குமாா், சுகாதார ஆலோசகராக டாக்டா் வி.செளந்தரராஜன், தலைவராக அ.அப்துல் மஜீத், துணைத் தலைவராக ஆா்.எஸ்.ராமசாமி, செயலராக ஏ.ஆனந்தராஜ், இணைச் செயலராக செள.சரவணன், பொருளாளராக ஆா். ராஜூ ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளராக  அன்வா்தீன், கௌரவ உறுப்பினா்களாக கே.கான்முகமது, எஸ்.ஜகுபா்அலி, பழ.பழனியப்பன், ஜி.ராஜா, ராம்குமாா், பெஸ்ட் குமாா், சந்திரமோகன், நீலவேணி மக்கள் தொடா்பாளா்  ப.குழ. சரவணன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தொடக்க விழாவையொட்டி  பாந்தகுளம் பகுதி   பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடடிநீா் வழங்கப்பட்டது. அறக்கட்டளை சாா்பில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கான வழிகாட்டல்,ஆலோசனை , பல்வேறு உதவிகள்  வழங்கப்படும் என அறக்கட்டளை  நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com