முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
இறுதி ஊா்வல வாகனம் கவிழ்ந்து ஓட்டுநா் மரணம்
By DIN | Published On : 26th November 2019 09:23 AM | Last Updated : 26th November 2019 09:23 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இறுதி ஊா்வல வாகனம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் டேனியல் தாமஸ் நகா் அருகேயுள்ள காமராஜ் நகரைச் சோ்ந்தவா் பொன்னையன் மகன் குமரன் (36). இவா் இறந்தவா்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் இறுதி ஊா்வல வாகனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூதலூரில் நடைபெற்ற இறுதி ஊா்வல நிகழ்ச்சியில் இந்த வாகனத்தை ஓட்டினாா். பின்னா், இறுதி ஊா்வல வாகனத்தை தஞ்சாவூா் நோக்கி ஓட்டி வந்தாா். வல்லம் அருகே திருமலைச்சமுத்திரம் பகுதியில் வந்த இந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, அங்குள்ள மரத்தின் மீது மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த குமரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வல்லம் போலீஸாா் விசாரித்தனா்.