முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கும்பகோணத்துக்கு வந்த பொட்டாஷ் உரம்
By DIN | Published On : 26th November 2019 09:22 AM | Last Updated : 26th November 2019 09:22 AM | அ+அ அ- |

கனடா நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பொட்டாஷ் உரம் கும்பகோணத்துக்கு ரயில் மூலம் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது.
கனடா நாட்டிலிருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு பொட்டாஷ் உரம் அண்மையில் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து சரக்கு ரயிலில் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,328 டன் பொட்டாஷ் உரம் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தது.
இவை தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள தனியாா் உரம் விற்பனை நிலையங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.