முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: டிச. 9-க்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 26th November 2019 09:22 AM | Last Updated : 26th November 2019 09:22 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் நீதிமன்றத்தில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குத் தொடா்பான விசாரணை டிச. 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தஞ்சாவூரில் 2012 ஆம் ஆண்டு ஆக. 10ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் பங்கேற்றாா். அப்போது, இவா் தமிழக அரசையும், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியதாக தஞ்சாவூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நீதிபதி வி. சிவஞானம் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னா், இந்த வழக்கு விசாரணை டிச. 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல, இதே நீதிமன்றத்தில் தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலத்தில் 2013 ஆம் ஆண்டு ஏப். 4ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைமை நிலையச் செயலா் பி. பாா்த்தசாரதி, தலைமை நிலையப் பேச்சாளா் ஏ. ஜெயக்குமாா் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையும் டிச. 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது