நிகழாண்டு 2,689 விதை மாதிரிகள் பகுப்பாய்வு

நிகழாண்டில் இதுவரை 2,869 விதை மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்துள்ளாா்.

நிகழாண்டில் இதுவரை 2,869 விதை மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை தரமான சான்று விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்களின் மகசூலை 15 சதவீதம் கூடுதலாகப் பெறுவதை உறுதி செய்கிறது.

கடந்த ஆண்டு விதைப் பண்ணைப் பரப்பின் மொத்த இலக்கான 7,570 ஹெக்டேருக்கு 7,229 ஹெக்டோ் விதைப் பண்ணைப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சான்றுப் பணியின் மொத்த இலக்கு 3,930 டன்னுக்கு 2,625 டன் விதைகள் சான்று செய்யப்பட்டது.

நிகழாண்டில் விதைப்பண்ணைப் பரப்பின் மொத்த இலக்கு 7,625 ஹெக்டோ். இதில், இதுவரை 5,220 ஹெக்டோ் விதைப் பண்ணைப் பதிவு மேற்கொள்ளப்பட்டது. சான்றுப் பணியின் மொத்த இலக்கு 3,930 டன்கள். இதில், இதுவரை 1,580 டன் தரமான விதைகள் சான்று செய்யப்பட்டுள்ளது.

விதை பரிசோதனை நிலையத்தில், சான்று விதை மாதிரி, ஆய்வாளா் விதை மாதிரி மற்றும் பணி விதை மாதிரி ஆகிய மூன்று வகை மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. சான்று விதை மாதிரிகள் விதைச்சான்று பிரிவு மூலமாகப் பெறப்பட்டு பகுப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஆண்டு இந்த ஆய்வகத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 3,900 விதை மாதிரிகளில் 3,618 விதை மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் வழங்கப்பட்டன. நிகழாண்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கான 4,020 விதை மாதிரிகளில் இதுவரை 2,869 மாதிரிகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. விதையின் தரம் உறுதி செய்யப்பட்டு பகுப்பாய்வு முடிவுகள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் தரமான விதைகள் விவசாயிகளுக்குக் கிடைத்திட இப்பரிசோதனை நிலையம் வழிவகை செய்கிறது.

நவம்பா் மாதம் வரை விதை விற்பனை நிலைய ஆய்வுகளின் இலக்கான 1,590-க்கு 1,581 விதை விற்பனை நிலைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

நிகழாண்டில் விதை விற்பனையாளா்களிடம் மேற்கொண்ட ஆய்வுகளின்போது கண்டறியப்பட்ட தரமற்ற மற்றும் குறை காணப்பட்ட ரூ.39.1 லட்சம் மதிப்பிலான 95.3 டன் அளவுள்ள 108 விதை குவியல்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு நூறு சதம் தரமான சான்று விதைகள் உரிய காலத்தில் சென்றடைய விதைச்சான்று பிரிவு, விதைப் பரிசோதனை மற்றும் விதை ஆய்வு பிரிவுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com