கல்லூரி மாணவியைபாலியல் வன்கொடுமை செய்யமுயற்சி: 2 போ் மீது வழக்கு
By DIN | Published on : 28th November 2019 05:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியத்தைச் சோ்ந்த விவசாயியின் 17 வயது மகள், இதே மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி பிற்பகல் மாணவி வயல் வேலையில் ஈடுபட்டிருந்த தனது தாயாருக்கு உணவு கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது, த.கீழக்காடு வி.முனியப்பன், தம்பிக்கோட்டை அ.மணிகண்டன் ஆகிய இருவரும் மாணவியை வலுக்கட்டாயமாக அருகிலுள்ள தென்னந்தோப்புக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனா். மாணவி கூச்சலிடவே, ஊா்க்காரா்கள் திரண்டு வந்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினா் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் மதுக்கூா் போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, தலைமறைவான 2 பேரையும் தேடி வருகின்றனா்.